சந்திரனின் மகன் புதன். இவர் சௌமியமானவர். கல்வியில் தேர்ந்த மேதைகளைத் தோற்றுவிப்பவர் புத பகவானே. கணிதம், வாதம் செய்தல், வைத்தியம் செய்தல், அறிவுத்திறமை போன்ற எல்லாவற்றுக்கும் காரணமானவர் புதன். ஒருவர் நாடக அமைப்பை உருவாக்குகிறார் என்றால் அதற்கு புதனே காரணம். சினிமாத்துறையில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் உருவாவதற்கும் இவரே காரணமாவார். அதேபோல நாளேடு, வார ஏடு, புத்தக வெளியீடு செய்பவர்களுக்கு புதனின் ஒத்துழைப்பு தேவை. ஒருவருக்கு நூலாக்கம் செய்யும் தகுதியைத் தருபவர் புதனே. இருபொருள்பட பேசும் திறன், நகைச்சுவை உணர்வுடன் கூடிய நயமான பேச்சுக்கு புதனே காரணம்.
உடலின் நரம்பு இவர். நரம்பு அமைப்பு முறையின் ஆதாரம் இவர். ஒருவர் கலைத் துறையில் சிறந்து விளங்க புதனேகாரணம்.
பசும்புல் நிறம் கொண்டவர். பல்சுவைப் பிரியர். வாத சரீரர். ராட்சச குணம் கொண்டவர். மரகதக் கல்லுக்குரியவர். விளையாட்டுத் தலங்களில் விரும்பி வசிப்பவர். தோட்டங்களில் நாட்டம் கொண் டவர். பஞ்சபூதங்களில் மண். புதன் ஆட்சி, உச்சம் பெற்றவர்கள் வடக்கு திசை நோக்கி வீடு அமைத்தால் சிறப் பாக இருக்கும். ஜாதகத்தில் பாவ கிரகங்களோடு புதன் சேர்ந்திருந் தால் பாவகிரகப் பலனைத் தருவார்.
சுபகிரகத்தோடு சேர்ந்திருந்தால் சுபகிரகப் பலனைத் தருவார். யாரோடும் சேராமல் தனித்திருந் தால் சுபப் பலன்களைத் தருவார். இவர் அலி கிரகம். வித்தைகளில் ஜோதிடம் இவருக்கு விசேஷமானது.
குதிரை வாகனம் கொண்டவர். மிதுனத்தில் ஆட்சியாகவும், கன்னியில் உச்சமாகவும் வருவார். எனவே மிதுனம், கன்னி ராசிக்காரர் களுக்கு உரியவர். மீனம் நீச வீடு.
சூரியன், சுக்கிரன் நண்பர்கள். செவ்வாய், குரு, சனி சமமான வர்கள். பித்தளை உலோகத்திற் குரியவர். நான்கு உபாயங்களில் பேதம் இவருடையது.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு தசாபுக்தி ஆரம்ப நாயகர். ஜாதகத்தில் புதன் உச்சம் அல்லது ஆட்சி பெற்று சுபகிரகங்களோடு சேர்ந்திருப்பது நல்லது. அப்படி இருந்து இவரது தசை அல்லது புக்தி நடக்கும்போது ஜாதகரை உயர்ந்த நிலைக்கு உயர்த்திவிடுவார். "பெருந்திரள் புதன் எனும் பெயரினால்' என்று பாகவத புராணம் புதனது ஆற்றலைப் போற்றுகிறது. கிரக பதி, ஞானி என்றும் இவரை அழைப்பர்.
"புதன் ஆச்ரயாமி ஸ்ததம்' என்று தொடங்கி, தம் கீர்த் தனத்தில் புதனுடைய பிரதா பங்களைப் பாடுகிறார் தீட்சிதர். "சீரும், செல்வமும் வழங்குபவர்', "எப்போதும் ஆனந்தத்துடன் விளங்குபவர்' என்றும் தீட்சிதர் கூறுகிறார். புதன் மந்திரம் ஜெபித்தால் கவிபாடும் திறன் வரும் என்று பெரியோர் சொல்வர். அறிவையளிப்பவர் என்பதால் புத்தி தாதா, தனம் தருவதனால் தனப் பிரதன் என்றும் இவர் போற் றப்படுகிறார்.
இத்தகைய வல்லமையுடைய புதனைப் போற்றி வணங்குவதற் குரிய பரிகாரங்கள்:
பரிகாரம்-1
புதன் பகவான் லிங்கம் காசியில் உள்ளது. அங்கு செல்லும் வாய்ப்புள்ளவர்கள் கங்கையில் குளித்து அஙகுள்ள புதன் பகவானை வணங்கிவர நன்மையுண்டு.
பரிகாரம்-2
காக்கும் கடவுள் திருமாலின் திருவருளை நமக்கெல்லாம் வாரிவழங்கும் ஆற்றல் படைத்த புதனை இதயத்தில் நிறுத்தி வழிபடவேண்டும். புதனுக்குரிய தானியம் வெந்தயம். அதை வெள்ளைத்துணியில் முடிந்து சாமி அறையில் வைத்து தினமும், "புதன் பகவானே!' எங்களுக்கு நன்மை செய், அறிவாற்றல் கொடு' என்று வணங்கிவர, புதன் பகவான் நன்மை தருவார்.
செல்: 94871 68174